• mangalakuntuparish@gmail.com
  • 04651 - 224395

புனித பெர்னதெத் இளைஞர் இயக்கம்

 

கூட்டம் நடைபெறும் நாள்   :   ஞாயிறு காலை 10.15 மணி

உறுப்பினர் எண்ணிக்கை   :   29 (22 ஆண்கள், 7 பெண்கள்)

பங்குப்பேரவை உறுப்பினர்   :   செல்வன். பெஸ்லின் பிராஸ்பின்

நிர்வாகிகள் விபரம்

தலைவர்   :   செல்வன். அருண் வின்னர்

துணைத்தலைவர்   :   செல்வி. அஞ்சு

செயலர்   :   செல்வி.அனுஷா

துணைச்செயலர்   :   செல்வி. அட்லண்ட் சோனோ

பொருளர்   :   செல்வன். அகில் ராஜ்

 

சபையின் முதன்மைகள்

v  இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு செயல்படுதல்.

v  உயரிய குறிக்கோளுடன் நற்பண்புகளை மேற்கொள்ளுதல்.

v  உதவி செய்வதன் மூலம் இறை உறவை வெளிப்படுத்துதல்.

v  சமூகத்தை ஒன்றிணைக்கும் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுதல்.

 

செயல்பாடுகள்:

v  பங்கின் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கணக்கெடுக்கப்பட்டது.

v  இரத்ததான முகாம், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.

v  சிறப்புக் குழந்தைகள் காப்பகங்களுக்குச் சென்று அவர்களுடன் பேசி மகிழ்ந்து காலை மதியம் அவர்களுடன் சேர்ந்து உணவு உண்டு மகிழ்வோம்.

v  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஊன்று கோல் வாங்கி கொடுக்கப்பட்டது.

v  குடும்பத்தலைவரை இழந்த குடும்பத்திற்கு ரூபாய் 2500 கொடுத்து உதவப்பட்டது.

v  புற்று நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூபாய் 2000 உதவி செய்யப்பட்டது.

v  உடல் நலம் சரியில்லாத இயக்க தோழர் ஏடுகளுக்கு ரூபாய் 15000 உதவி புரிந்தோம்.

v  இயக்கத்தின் தோழியின் தந்தை உடல் நலம் சரியில்லாத போது ரூபாய் 12000 கொடுத்து உதவி செய்யப்பட்டது.

v  திருமண உதவித் தொகை வழங்கப்பட்டது.

v  ஆண்டு தோறும் சுற்றுலா செல்வது.

v  நோயாளிகளை சந்தித்து ஜெபித்து சிறிய பொருள் உதவி செய்வது.

 

எதிர்காலத் திட்டங்கள்:

v  தூய்மையான இந்தியாவை உருவாக்க இந்திய அரசின் செயல்பாட்டுடன் இணைந்து செயல்படுதல்.

v  கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்பது.

v  இறையரசின் மதிப்பீடுகளின் படி வாழ்ந்து நிறை வாழ்வை நோக்கி மலரும் இறையரசை உருவாக்குதல்.

v  கலைக் குழுக்கள் உருவாக்கப்படுதல்.

v  வேலைவாய்புகளை அதிகரிக்க விழிப்புணர்வுகள் நடத்துதல்.

 

பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:

v  பங்களவில் மறைக்கல்வியுடன் இணைந்து விவிலிய போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

v  ஆலயத்தில் செப்டம்பர் மாதம் முழுவதும் ஜெபமாலை செய்து இறுதி நாளை ஆலய வழிபாடு மற்றும் இரவு சிற்றுண்டியின் மகிழ்ச்சியோடு பங்கு மக்களோடு கொண்டாடுதல்.

v  கிறிஸ்து பிறப்பு குடில் அமைத்தல் -பஜனையில் கலந்து கொள்ளுதல் கிறிஸ்து பிறப்பு குலுக்கல் - மற்றும் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினோம்.

v  வருடந்தோறும் தவக்காலத்தில் ஒருநாள் (வெள்ளிக் கிழமை)சிலுவைப் பாதை எமது இயக்க உறுப்பினர்களால் நடத்தப்பட்டது.

v  பங்கு குடும்பவிழாவில் ஆலய வழிபாடு மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது.

v  ஆலயத்தில் திருப்பலி சிறப்பித்தல்.

v  குருசடி சுத்தம் செய்தல் ஆலயம் மற்றும் ஆலய வளாகம் சுத்தம் செய்தல்.

v  பங்கு உறவுச்சந்தை நகழ்வுகளில் இணைந்து பங்கெடுத்தல்.

v  பங்கின் அனைத்து சிறப்பு நிகழ்வுகளிலும் எமது இயக்க உறுப்பினர்கள் கலந்து சிறப்புடன் செயல்படுகின்றோம்.


© All Rights Reserved | Designed and Developed by MTL Webking Technology