• mangalakuntuparish@gmail.com
  • 04651 - 224395

வழிபாட்டுக்குழு

 

கூட்டம் நடைபெறும் நாள்   :   வியாழன் மாலை 06.00 மணி

மொத்த உறுப்பினர்கள்   :   18 (பெண்கள்)

நிர்வாகிகள் விபரம்

தலைவர்   :   திருமதி. கசீலா

துணைத்தலைவர் : திருமதி. சுபா

செயலர்  :   திருமதி. டெய்சி

துணைச்செயலர்   :   திருமதி. ரூபி

பொருளர்   :   திருமதி. மெர்லின் மலர்

 

அமைப்பின் முதன்மைகள்

v  திரு வழிபாட்டுக்கு தகுந்த தயாரிப்புகள் செய்வது

v  திருவழிபாட்டு கான மைய சிந்தனை சிறப்பு வழிபாட்டு முறைகள் தேர்வு செய்வது

v  திருவழிபாட்டில் நிறைகுறைகளை கலந்தாலோசிப்பது

v  திருவழிபாட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பங்குதந்தை உடன் இணைந்து முடிவு செய்வது

v  திரு வழிபாட்டுக்கான ஒழுங்குமுறைகள் அறிந்து கொள்வதற்கான வகுப்புகளை ஒருங்கிணைத்தல்

 

செயல்பாடுகள்:

v  வாரம் தவறாமல் கூட்டங்கள் நடத்தி ஞாயிறுத் திருப்பலி குறித்த திட்டமிடலில் ஈடுபடுவோம்.

v  அருட்பணியாளர், தாமஸ் அருளானந்தம் உதவியுடன் வெள்ளி மாலை திருப்பலியும் ஆராதனையும் தொடங்கப்பட்டது. குழந்தைகளை உற்சாகப்படுத்தும் நோக்கில் பிறந்தநாளன்று திருப்பலி முடியும் நேரத்தில் வாழ்த்துப் பாடல் பாடி பரிசு வழங்கி வருகிறோம்.

v  மாதத்தின் 2-ம் வாரம் நடைபெறும் வட்டாரக் கூட்டத்தில் கலந்துகொள்கிறோம்.

v  குருசடியில் நடைபெறும் விழாக்களில் வழிபாட்டுக்குழு திருப்பலி சிறப்பித்து வருகிறோம்.

v  திருவிழாக்கள் பண்டிகைகள் எல்லாவற்றிலும் தேவையான கருத்துகளை வழிபாட்டு குழுவில் பேசி நேர்த்தியாக வழிபாடு நடைபெற உதவி புரிந்து வருகிறோம்.

v  13.07.2017 நடந்த கூட்டத்தில் இயற்கை உணவு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

v  ஆகஸ்டு 15ம் நாள் மற்றும் திருக்குடும்ப திருவிழா ஆகிய நாட்களில் முதல் திருவிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

v  செப்டம்பர் 14ம் நாள் குருசடி ஆண்டுவிழாவாக கொண்டாடுவது பற்றி பேசப்பட்டது.

v  அஞ்சலி, ஆரத்தி திருவிழா நாட்களில் மட்டும் போதும் மற்ற நாட்கள் தேவையில்லை என பேசப்பட்டது.

v  மாதத்தின் முதல் வாரம் பயிற்சி கொடுக்கலாம் என பேசப்பட்டது. ஞாயிறு திருப்பலி மற்றும் சிறப்புக்கால திருப்பலிகளுக்கான மைய சிந்தனை அன்பியங்கள் வழியாக எடுக்க பிரித்து கொடுக்கப்பட்டது.

v  தவக்கால தியானம் நடத்துவது. திருப்பயணம் நடத்துவது பற்றி பேசி செயல்படுத்தப்பட்டது.

v  29.10.2021 அன்று மாதாவணக்கத்தின் நிறைவாக திருப்பலியும் அதனை தொடர்ந்து தேர் பவனியும் நடைபெற்றது.

v  29.11.2021 அன்று ஏழையர் தினமாக கொண்டாட வேண்டும் என்றும் அன்றைய காணிக்கைகளை பங்கில் மற்றும் பங்கிற்கு வெளியே உள்ள ஏழையருக்கு வழங்க வேண்டும் எனவும் பேசப்பட்டது.

v  கிறிஸ்துபிறப்பு பெருவிழாவில் காய்கறிகள், ஒளி, பூக்கள், தானியங்கள். முளைப்பயிறு, செடிகள் என ஒவ்வொரு அன்பியத்திற்கும் தனித்தனியாக பிரித்து கொடுக்கப்பட்டு மிக சிறப்பாக பங்குபெற்றனர்.

 

எதிர்காலத் திட்டங்கள்:

v  தொடர் பயிற்சி மூலம் ஆன்மீக அறிவை ஆழப்படுத்த முயற்சிகள் எடுக்கவேண்டும்.

v  வழிபாடுகளில் அர்த்தமுள்ள விதத்தில் பங்குபெற பயிற்சிகள் கொடுத்தல்.

 

பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:

v  வழிபாட்டுக் கூட்டங்களை தவறாமல் நடத்தி வழிபாடுகள் பற்றி திட்டமிடல்.

v  ஞாயிறு வழிபாடு, சிறப்பு வழிபாடுகளில் பங்குப்பணியாளரோடு ஒத்துழைத்தல்.

v  நோயாளிகளுக்கு நற்கருணை வழங்க பங்குப்பணியாளருக்கு உதவி செய்தல்.

v  இறந்தவர் இல்லம் சென்று செபித்து திருப்பலியிலும் அடக்க சடங்கிலும் பங்குபெறல்.


© All Rights Reserved | Designed and Developed by MTL Webking Technology