• mangalakuntuparish@gmail.com
  • 04651 - 224395

வின்சென்ட் தே பவுல் சபை

 

கூட்டம் நடைபெறும் நாள்   :   ஞாயிறு காலை 10.30 மணி

பங்குப்பேரவை உறுப்பினர்   :   திருமதி. லிவிங் பிறிப்பெட்

மொத்த உறுப்பினர்கள்   :   17 (11 ஆண்கள், 6 பெண்கள்)

மொத்த உறுப்பினர்கள்   :   17 (ஆண்கள் 11, பெண்கள் 6)

நிர்வாகிகள் விபரம்

தலைவர்   :   திருமதி. பொனிப்பாசியாள்

துணைத்தலைவர்   :   திரு. சேவிங்கிறாஸ்

செயலர்   :   திரு. ஜாண்சன்

பொருளர்   :   திரு. சதீஸ் ஜெயசிங்

 

சபையின் முதன்மைகள்:

v  ஏழை மக்களுக்கு உதவதல், கல்வி, திருமணம், மருத்துவ உதவி வழங்குதல். நோயாளிகளை வீடுகளிலும் மருத்துவமனைகளிலும் சந்தித்து செபித்தல்.

v  ஏழைகளுக்கு வீடுகட்ட, வீடு பராமாரிக்க உதவி செய்தல்.

v  வட்டார கூட்டங்களில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் ஏழைகளுக்கு கிடைக்க உதவுதல்.

 

செயல்பாடுகள்:

v  புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு ரூ. 1000 வழங்கினோம்

v  திரு. சுந்தரம் என்பவருக்கு மருத்துவ உதவியாக 1000 ரூபாயும், திரு. ஜெயராஜ் என்பவருக்கு மருத்துவ உதவியாக 2285 ரூபாயும், திருமதி. மரிய கனகம் என்பவருக்கு மருத்துவ உதவியாக 500 ரூபாயும், திருமதி. மரியநேசம் என்பவருக்கு மருத்துவ உதவியாக 2000 ரூபாயும், திரு. சுரேஸ் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூ.7000- ம் வழங்கப்பட்டது.

v  சுபையில 2016-ம் ஆண்டு 5 தத்துக் குடும்பங்களுக்கு 2500 ரூபாயும், 2017-ம் ஆண்டு 3 குடும்பங்களுக்கு ரூ.1500-ம், 2018-ம் ஆண்டு 5 குடும்பங்களுக்கு 2500 ரூபாயும், 2019 -ம் ஆண்டு உயிர்ப்பு அன்பளிப்பாக 5 குடும்பங்களுக்கு ரூ. 3500 -ம், கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக 7 குடும்பங்களுக்கு ரூ. 5000 -ம், 2020-ம் ஆண்டு 6 குடும்பங்களுக்கு ரூ.4000-ம் 2021-ம் ஆண்டு உயிர்ப்பு அன்பளிப்பாக 5 குடும்பங்களுக்கு ரூ.2500 -ம் கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக 7 குடும்பங்களுக்கு 5500 ரூபாயும் கொடுக்கப்பட்டது.

v  கல்வி உதவித்தொகையாக 2016-ம் ஆண்டு அபிஷா என்ற மாணவிக்கு 2000 ரூபாயும், 2017-ம் ஆண்டு ரூ.2000 ம் வழங்கப்பட்டது. மேலும் 2018-ம் ஆண்டு கல்வி உதவித்தொகையாக 15,250 ரூபாயும், 2019-ம் ஆண்டு 15000 ரூபாயும், 2021 -ம் ஆண்டு 9700 ரூபாயும் வழங்கியுள்ளோம்.

v  திருமண உதவியாக 2020-ம் ஆண்டு மினிஷா என்ற பெண்ணிற்கு 10000 ரூபாயும், ஒரு இந்து மதசகோதரியின் திருமணத்திற்காக 6000 ரூபாயும் வழங்கப்பட்டது.

v  மலையன்விளையைச் சார்ந்த திருமதி. மரிய கனகம் என்பவருக்கு 2017-ம் ஆண்டு ரூ.1,60,329 செலவில் ஒரு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இதில் கோட்டாறு மத்திய பேரவையிலிருந்து 25,000 ரூபாயும், கானாவூர் வட்டார சபையிலிருந்து 25,000 ரூபாயும் மீதி தொகையை இயக்க உறுப்பினர்களாலும் வழங்கப்பட்டது. மேலும் திருமதி. மரிய நேசம் என்பவருக்கு வீடு பராமரிப்பு தொகையாக ரூ. 1000 வழங்கப்பட்டது.

v  நோயாளர்களுக்கு உணவு வழங்க மருத்துவக்கல்லூரி பகுதியில் வழங்கப்படும் உணவிற்காக ஆறு முறை 2000, 500, 800, 800, 1000, 1100 வழங்கப்பட்டது.

v  மாதந்தோறும் நடைபெறும் வட்டார சபைக் கூட்டங்களில் நிர்வாகிகள் கலந்து கொண்டோம்.

v  கொரோனா நிவாரண நிதியாக சபை சார்பில் ரூ.27,000 வழங்கினோம்.

 

எதிர்காலத் திட்டங்கள்:

v  தத்து குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்தல்.

v  உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது.

v  ஏழை குடும்பங்களுக்கு வீடுகட்டிக் கொடுத்தல்

v  கல்வி, மருத்துவ, திருமண உதவிகள் அதிகமாக வழங்குதல்.

 

பங்குடன் எமது இணைந்த பங்களிப்பு:

v  ஆலய விழாக்களில் பங்கெடுத்தல், வழிபாடுகள் சிறப்பிப்பது.

v  ஏழையர் தினத்தன்று எமது முழுமையான உடனிருப்பை அளிப்பது.

v  பங்கின் வளர்ச்சியிலும் தேவைகளிலும் உடனிருந்து வருகின்றோம்.

v  பங்கு சார்பாக எடுக்கும் முயற்சிகளில் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம்.


© All Rights Reserved | Designed and Developed by MTL Webking Technology