கூட்டம் நடைபெறும் நாள் : மூன்றாம் ஞாயிறு காலை 11.15 மணி
மொத்த உறுப்பினர்கள் : 32 (16 ஆண்கள், 16 பெண்கள்)
நிர்வாகிகள் விபரம்
தலைவர் : அருட்பணி பிலிப் ஆரோக்கிய திவ்வியன்
துணைத்தலைவர் : திரு விஜயக்குமார்
செயலர் : திரு ராபர்ட் பெல்லார்மின்
துணைத்தலைவர் : திருமதி. மேரி விஜயராணி
பொருளர் : திரு. செல்வசிங்
அருட்பணிப் பேரவையின் முதன்மைகள் :
v பங்கின் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்து செய்தல்.
v இறைமக்கள் இறைவழிபாடுகளில் அர்த்தமுள்ள விதத்தில் பங்குபெற ஆவன செய்தல்.
v பங்கு மக்களின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுத்தல்
v சிறார்கள், இளையோர் ஆகிறோரின் அறிவு சார் வளர்ச்சியில் இணைந்து உழைத்தல்
v உடல் நலமற்றிருப்போரை சந்தித்து செப உதவிகள் செய்தல்
v பங்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தி ஏழை,எளிய மக்களுக்கு உதவிகள் செய்தல்
செயல்பாடுகள் :
v ஏழையர் தினத்தன்று ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்ய காணிக்கைகள் பிரிக்கப்பட்டு முதியோர், மாற்றுத்திறனாளி இல்லங்களுக்கு சென்று வழங்கப்பட்டது.
v 2020-ம் ஆண்டு நிறைவில் பங்கின் அனைத்து அமைப்பு நிர்வாகிகளுடன் இணைந்து ஆண்டு திட்டமிடல் பயிற்சியானது நடைபெற்றது மொத்தம் 118 நபர்கள் கலந்து கொண்டனர் அதுகுறித்த திட்டமிடல் தொடர்ந்து நடைபெற்று பரிசீலனை செய்த செயல்பாடுகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
v ஆலயத்தில் ஒலி அமைப்புகள் சரி செய்யப்பட்டது.
v இட்டகவேலி தச்சன்பரம்பு போன்ற பங்குகளில் ஆலயம் கட்ட நன்கொடைகள் கேட்டு வரும்போது மக்கள் அனைவரும் நிறைவாக நன்கொடைகள் வழங்கினர்.
v பங்கில் ஏழை மக்கள் இருவருக்கு வீடுகட்ட ரூ. 25.000 மற்றும் ரூ.30000 வழங்க ப்பட்டது.
v ஆலயத்தில் புனரமைப்பு பணிகளாக பெயின்டிங் மற்றும் கதவு, சன்னல்களுக்கு பாளிஷ் அடிக்கப்பட்டது.
v ஆலய வளாகத்தில் கழிவறை கட்டப்பட்டது.
v பங்குப்பணியாளர் இல்லம் மற்றும் குருசடி போன்றவை சீரமைக்கப்பட்டன.
v ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள 7 சென்ட் நிலம் வாங்கப்பட்டது.
v கிறிஸ்து பிறப்பு விழாவினை முன்னிட்டு 75-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
v 10 நபர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
v ஏழை பெண்ணின் திருமணத்திற்காக பங்கில் செயல்படும் அன்பியங்கள் சார்பாக மற்றும் பங்கு சார்பாக ரூ. 1.25,000 பிரித்து கொடுக்கப்பட்டது.
v ஆண்டுதோறும் கிறிஸ்துபிறப்பை முன்னிட்டு ரூ.15000 ஒதுக்கி ஏழைகளுக்கு உதவிகள் செயகிறோம்.
v நல்ல சமாரியன் உதவித்திட்டம் தொடங்கி ஏழை நோயாளர்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம்.
v ஏழை மாணவர் கல்வித்திட்டம் தொடங்கி நிதி திரட்டப்பட்டு வருகிறது.
எதிர்காலத் திட்டங்கள் :
v ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள இடம் வாங்குவது.
v ஆலயத்திற்கு சொந்தமாக ஒரு சமூக நலக்கூடம் கட்டுவது.