• mangalakuntuparish@gmail.com
  • 04651 - 224395

வளர்ச்சிப்பணிகள் குறித்த கலந்துரையாடலில் உருவான திட்டங்கள்

 

பயிற்சி நடைபெற்ற நாள்   :   27.12.2020

பயிற்சி வழங்கியவர்   :   அருட்பணி ஜெனிபர் எடிசன்

பயிற்சி நடைபெற்ற இடம்   :   ஆலய கலையரங்கம், மங்கலக்குன்று

கலந்துகொண்டோர்

v  பங்கு அருட்பணிப்பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள்

v  அனைத்து திருத்தூது கழகம் இயக்கங்களின் நிர்வாகிகள் உறுப்பினர்கள்

v  அனைத்து அன்பிய நிர்வாகிகள்

v  மறைக்கல்வி மன்ற ஆசிரியர்கள்

v  வழிபாட்டுக்குழு

 

விவாதிக்கப்பட்ட கருத்துகள்:

1. அறிவு மற்றும் கல்விசார் வளர்ச்சிப் பணிகளில் மங்கலக்குன்று

v  ஏழை மாணவர் நிதியை ஏற்படுத்தி கல்வி கற்க முடியாத நிலையில் இருக்கின்ற ஏழை மாணவர்கள் கல்வி பெற உதவிசெய்தல்.

v  கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு டியூஷன் வழங்குதல்.

v  மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சி அளித்தல்.

v  புனிதர்கள் வரலாறு, வத்திக்கான் சங்க ஏடுகள், விவிலிய ஆளுமைகள், சிறுகதை தொகுப்பு போன்றவை அடங்கிய நூலகம் ஏற்படுத்துதல்.

v  6ம் வகுப்பு முதல் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு திறனாய்வுப் பயிற்சிகள் அளித்து, அவர்களை போட்டித் தேர்வுகளுக்காகத் தயாரித்தல்.

v மாணவர்கள், குழந்தைகள் மற்றும் பங்கு மக்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்கும் விதத்தில் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள், வினாடிவினா போன்றவைகள் அடங்கிய பங்கு சார்பாக இதழ் வெளியிடுதல்.

v  வருடத்திற்கு ஒருமுறையேனும் அனைத்து திருத்தூதுக் கழகங்கள் இயக்கங்கள் இணைந்து புத்தகக் கண்காட்சி அமைத்தல்.

v  உயர்கல்வி பெற வாய்ப்பில்லாத மாணவர்களுக்கு தொழிற்கல்வி பெற மற்றும் சுய தொழில செய்ய உதவி செய்தல், வழிகாட்டுதல்

 

2. கூட்டுச் செயல்பாட்டில் மங்கலக்குன்று :

v ஒவ்வொரு அன்பியங்களிலிருந்தும் ஒரு நபர் வீதம் இல்ல சந்திப்புக் குழுவினரைதேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் நம் பங்கில் பல்வேறு விதமான துன்பங்களில் சிக்கி தவிக்கும் மக்களை இனங்கண்டு உதவி செய்தல்.

v  செபக்குழு ஏற்படுத்தி, தேவைக்கேற்றார்போல் இணைந்து செபிக்க வழிவகை செய்தல்.

v  மூன்று மாதத்திற்கு ஒருமுறை அன்பிய மன்ற விழா நடத்தி உறவை வளர்த்தல்.

v  நீதிக்கான மற்றும் விழிப்புணர்வு போராட்டங்களில் நம் பங்கு மக்களை பங்கேற்கச் செய்தல்

v  ஆலய வளாகத்தை இணைந்து தூய்மையாக்குதல்.

v  இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது, அவற்றால் பாதிக்கப்படும் மக்களுக்க அனைவரும் இணைந்து உதவி செய்தல்.

v  நஞ்சில்லா வேளாண்மைப் பொருட்களை உற்பத்திச் செய்து அவற்றைக் கொண்டு உணவுத்திருவிழா சிறப்பித்தல்.

v  நம் பங்கிலுள்ள முதியோர் அனைவரையும் ஒருங்கிணைத்து முதியோர் தினத்தை சிறப்பித்தல்.

v ஊடகங்கள், போதைப் பழக்க வழக்கங்கள் இயற்கையை நேசித்தல் மற்றும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு காணொலியைத் தயாரித்து அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு வழங்குதல்.

3. முழுமனித ஆளுமை வளர்ச்சிப் பணிகளில் மங்கலக்குன்று:

v  வழிபாட்டு நிகழ்வுகளில் அனைத்து சிறார்களையும் பங்கேற்கச் செய்தல்.

v  ஊடகங்கள் பயன்படுத்தும் முறை பற்றி பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளித்தல்.

v இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சிகள் வழங்குதல். நம் பங்கின் உறுப்பினர்களைக் கொண்டு கலைக்குழு உருவாக்குதல்.

v  பல்வேறு வகையான போட்டிகள் மூலமாக அனைத்துத் தரப்பினருடைய திறமைகளையும் வெளிப்படுத்த செய்தல்.

4. சமூக, சமய, உறவுசார் வளர்ச்சிப் பணியில் மங்கலக்குன்று:

v  நம் பங்கில் கொண்டாடப்படும் பொதுவிழாக்களில் பிற சமயத்தினரையும் கலந்து கொள்ளச் செய்தல்.

v  கமய வேறுபாடின்றி, நோயாளிகள், வயது முதிர்ந்தோர். ஆதரவற்றோர் மற்றும் தேவையில் உழல்வோர் போன்றோரைச் சந்தித்து அவர்களை அன்பால் அரவணைத்து, அவர்களுடைய தேவைக்கேற்றார் போல் உதவி செய்தல்.

v திருப்பலியில் பங்கேற்கும் இறைமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில், ஆலயத்திற்கென திருவிவிலியங்கள் மற்றும் திருப்பலி அடங்கிய பாடல் புத்தங்கங்களை வாங்கி வைத்தல்.

v  திருவிழாவின் போது ஒருநாள் பல்சமய நிகழ்ச்சி நடத்தி, பிற சமயத்தினரை பங்கேற்கச் செய்வதோடு நாமும் அவர்களுடைய விழாக்களில் கலந்து கொள்ளல்.

v  இறைபக்தியை ஆழப்படுத்தும் வகையில் திருப்பலியைத் தவிர ஆலயத்தினுள் வேறு நிகழ்வுகள் நடத்தப்படாமல் இருத்தல்.

v  அன்பிய ஆண்டு விழாக்களில் அருகிலிருக்கும் பிற சமயத்தாரையும் பங்கேற்கச் செய்தல்.

5.வாழ்விழந்த வறியவர்கள் முன்னேற்றப் பாதையில் மங்கலக்குன்று :

v  நம் பங்கில் இரத்ததானம் மற்றும் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதோடு இதற்கென ஒரு அமைப்பை உருவாக்குதல்.

v  ஏழைப் பெண்கள் திருமண நிதியை ஏற்படுத்தி ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவுதல்.

v தனிமையில் வாடும் ஆதரவற்றோரைச் சந்தித்து உதவுதல் (முதியவர்கள். மனநலம் குன்றியவர்கள், பெற்றோரை இழந்தக் குழந்தைகள், நோயாளிகள்)

v  ஒவ்வொரு அன்பியத்திலும் போதை பழக்க வழக்கங்களுக்க அடிமையாகி இருப்பவர்களை கணக்கெடுத்து 'மறுவாழ்வு இல்லம்' செல்ல வழிகாட்டுதல்.

6.வயது வாரியான வளர்ச்சிப் பணிகளில் மங்கலக்குன்று :

v  பங்கில் இசை மற்றும் நடன வகுப்புகள் துவக்கப்பட்டு அவற்றின் மூலம்குழந்தைகளுக்கு பயிற்சிகள் வழங்குதல்.

v  வயது வாரியான போட்டிகள் நடத்தி திறமைகளை வெளி கொணர்தல்.

v  திருமணம் முடிந்த பெண்களுக்கு இயற்கை மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு அளித்து மூலிகைத் தோட்டம் அமைக்க பயிற்சியளித்தல்.

v  இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு ஊடகம் பற்றிய விழிப்புணர்வு கொடுத்தல்.

v  சிறார்களுக்கு சிறந்த பயிற்சிகள் அளித்து தன்னம்பிக்கையை வளர்த்தல்.


© All Rights Reserved | Designed and Developed by MTL Webking Technology