புனித பெர்னதெத் மேல்நிலைப்பள்ளி
மங்கலக்குன்று
மேலாளர் : மேதகு ஆயர் நசரேன் சூசை.
கண்காணிப்பாளர் : அருள்பணி L. ஜாண் பெனிட்டோ.
தாளாளர் : அருள்பணி G. பிலிப் ஆரோக்கிய திவ்வியன்.
தலைமையாசிரியர் : திருமதி. C. மேரி ஷைலா.
ஆசிரியர் மன்ற செயலர் : திரு. M. சார்லஸ்.
ஆசிரியர் மன்ற பொருளர் : திரு. T. அருண்.
பங்குப்பேரவை உறுப்பினர் : திரு. S. ஜார்ஜ் தாஸ்.
பள்ளியின் வளர்ச்சி :
தொடக்கப்பள்ளி - 12 . 06 . 1936.
நடுநிலைப்பள்ளி - 09 . 07 . 1944
உயர்நிலைப்பள்ளி - 01 . 08 . 1966
மேல்நிலைப்பள்ளி - 16 . 06 . 1980
பள்ளியின் முதன்மைகள் :
v எமது பள்ளியின் விருதுவாக்கான "உழைப்பும் ஒழுக்கமும்" என்பதன் அடிப்படையில் மாணவர்களை அறநெறியில் உருவாக்குதல்.
செயல்பாடுகள் :
v மாணவர்களை Trust Exam, NMMS Exam, NTSE Exam போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயாரித்து, வெற்றி பெறச் செய்து கல்வி உதவித்தொகை வருடந்தோறும் பெற்று வருகிறார்கள்.
v படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு கொரோனா தொற்றுக்கு முந்தைய காலங்களில் இரவு நேரமேற்பார்வை படிப்பு நடைபெறச் செய்து அவர்களை படிப்பில் முன்னேற்ற பாதையில் உருவாக்கப்பட்டார்கள்.
v முற்றிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களி்ன் கல்விக்கட்டணம், பள்ளி சீருடை போன்ற அடிப்படை வசதிகளை எமது ஆசிரியர்கள் மனமுவந்து செய்து வருகிறார்கள்.
v மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்குடன், தொலைவில் இருந்து வரும் மாணவர்களை, வாகன வசதி ஏற்பாடு செய்து அதற்கான செலவினத்தை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
v கொரோனா பெருந்தொற்து காலத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் இல்லங்களுக்கு சுமார் ஒரு இலட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் எமது ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களால் வழங்கப்பட்டது.
v மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெறும் பொருட்டு பள்ளி நேரத்திற்கு முன்பும், பள்ளி நேரத்திற்கு பின்பும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
v பள்ளி நேரம் முடிந்த பின்னர் மாணவர்களை பேருந்துகளில் அனுப்பி வைப்பதற்கு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
v காலை வழிப்பாட்டில், தமிழ் வழி மாணவர்களையும், ஆங்கில வழி மாணவர்களையும் சுழற்சி முறையில் பங்கேற்க செய்வதால் அனைத்து தர மாணவர்களுக்கும் வாய்ப்பு தரப்படுகிறது.
v பள்ளி ஆண்டுவ விழாவின் போது, பல்வேறு வைப்பு நிதிகள் வழியாக பெறப்படும் வட்டித்தொகை மூலம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு நிலைகளில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
v அவ்வப்போது இலக்கிய மன்றங்கள் மற்றும் கணித மன்றம், அறிவியல் மன்றம் நடத்தி மாணவர்களின் தனித்திறன் வளர்க்கப்பட்டு வருகிறது.
v பள்ளிக்கு வந்த பின்னர் உடல்நலக் குறைவு ஏற்படும் மாணவர்களை ஆட்டோவில் ஒரு ஆசிரியரின் துணையோடு அவர்களின் இல்லங்களுக்கு கொண்டு விடுவதும், அல்லது மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து அவர்களுடன் பாதுகாப்பாக அனுப்பி வைப்பதும் நடைமுறை வழக்கமாக உள்ளது.
v மாவட்ட அளவில், மாநில அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வெல்வதற்கு உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்றுவித்து வருகிறார்கள்.
v அரசுத்தரப்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித்தொகைகளையும், தகுதியுள்ள அனைத்து தர மாணவர்களுக்கும் பெற்று தரப்புடுகிறது.
v கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்புவரை காலையில் பள்ளி நேரம் தொடங்குவதற்கு முன்னர் ஆசிரியர்கள், அலுவலர்களின் ஒன்றிணைந்த Prayer நடைபெற்று வந்தது.
v கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு இணையதள காணொளி வகுப்புகள் எமது ஆசிரியர்களால் நடத்தப்பட்டது.
v எமது ஆசிரியர்கள்,அலுவலகப்பணியாளர்களின் ஒரு மாத ஊதியத்தில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சகல வசதிகளுடன் காற்றோட்டமாக அமர்ந்து கல்வி பயில ஏதுவாக அமைந்துள்ளது.
எதிர்காலத் திட்டங்கள் :
v மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
v பள்ளி வளாகத்கிற்குள் உள்கட்டமைப்புகளை சீரமைத்தல்
v (ஓட்டுக் கட்டிடங்களை முற்றிலும் அகற்றுதல்)
v Smart Class வசதி ஏற்படுத்துதல்.
v சகல வசதிகளுடன் மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் ஒரு நூலகம் அமைத்தல்
மாணவர் எண்ணிக்கை விபரம் 2021-2022
|
வகுப்பு |
தமிழ் வழி |
ஆங்கில வழி |
பெரு மொத்தம் |
||||||
|
ஆண் |
பெண் |
மொத்தம் |
ஆண் |
பெண் |
மொத்தம் |
ஆண் |
பெண் |
மொத்தம் |
|
|
6 |
7 |
5 |
12 |
13 |
21 |
34 |
20 |
26 |
46 |
|
7 |
12 |
6 |
18 |
17 |
16 |
33 |
29 |
22 |
51 |
|
8 |
9 |
13 |
22 |
14 |
10 |
24 |
23 |
23 |
46 |
|
9 |
27 |
14 |
41 |
13 |
16 |
29 |
40 |
30 |
70 |
|
10 |
17 |
20 |
37 |
7 |
7 |
14 |
24 |
27 |
51 |
|
11 |
49 |
28 |
77 |
12 |
12 |
24 |
61 |
40 |
101 |
|
12 |
29 |
36 |
65 |
8 |
8 |
16 |
37 |
44 |
81 |
|
மொத்தம் |
150 |
122 |
272 |
84 |
90 |
174 |
234 |
212 |
446 |